Saturday, September 20, 2008
மதத்தின் கதை..
இந்து மதத்த பத்தி உள்ள போறதுக்கு முன்னாடி அது எப்படி வந்ததுனு பாத்துடுவோம்.. உண்மையில இந்துங்க்றது ஒரு மதம் கிடையாது... மதம் கிறது ஒரு குறிப்பிட்ட ஆளோட சிந்தனையில் மக்களை உயர்த்த படைக்கப் பட்ட கோட்பாடுகளை பின்பற்றும் பல நூறு மக்களின் கூட்டம்..ஆனா இந்து மதம் அப்படியில்ல.. ஒரு ஆள் ஏற்ப்படுத்துனது இல்ல..மத்த நாட்டுக் காரங்க இங்க வரதுக்கு முன்னாடி அரசர்களுக்கு ஆதரவா இருந்த குருமார்கள் மக்களை நல்வழிப் படுத்துறதுக்காக ஏராளமான கோட்பாடுகளை ஏற்ப்படுத்துனாங்க.. அது தலைமுறை தலைமுறையா வாய்வளியாவும் ஓலைச் சுவடிகள் வழியாவும் கடந்த்துகிட்டு இருந்தது..கொஞ்சம் கொஞ்சமா கோட்பாடுகள் பிரிஞ்சு ரெண்டு பிரிவா நின்னது...இப்ப புரிஞ்சிருக்குமே.. சைவம் - வைணவம் ...தசாவதாரத்துல கமல் சொல்ற மாதிரி இந்தியாவுக்குள்ள மத்த மதங்கள் வராத காரணத்தால அவங்க ரெண்டு பிரிவுகளும் அவங்களுக்குள்ள அடிச்சிக்கிட்டு இருந்தாங்க... தன்னோட கோட்பாடுகளை கொண்டு போறதுக்காக தனக்கான ஒரு கடவுள் பெயர் உருவம் லாம் உருவாக்கி அத தன்னோட அடுத்த தலைமுறைக்கு கடத்துனாங்க ...அதுல உருவானதுதான் கடவுல்கள்ள யாரது ஒருத்தர் தப்பு பண்ணிட்டு அடுத்த கடவுளால விமோசனம் வாங்குற கதைகள்...தொடரும்...
Labels:
arthamulla inthu matham,
hindu,
hindu-myview,
hindu-region,
inthu,
inthumatham
Saturday, August 23, 2008
பிள்ளையார் சுழி...
பிள்ளையார் சுழி என சொன்னது மற்றவர்கள் கூறும் அர்த்தத்தில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்க அல்ல..முதலில் பிள்ளையார் சுழி பற்றி தெரிந்து கொள்வோம்..பிள்ளையார் சுழி பேனா கண்டுபிடித்தபின் மூட நம்பிக்கை யாளர்களால் சேர்க்கப் பட்டது அல்ல..ஆரம்ப காலத்தின் ஓலை சுவடி களிலேயே தொடங்கப் பட்டது ..
இப்பதான் எல்லாரும் முதல் பக்கத்துல மேல நடுவுல பிள்ளையார் சுழி போடுறோம். ஆனா உண்மையில முன்னாடி ஒவ்வொரு பக்கத்துலயும் அதாவது சுவடியோட ஒவ்வொரு ஓலைலயும் மேல வலது ஓரத்துல போடுவாங்க இதுக்கும் காரணம் மூட நம்பிக்கையில்ல..
வலது ஓரத்துலைருந்து ஓலை உட்பக்கமா சுருண்டு வரும்.. பனை ஓலை பாத்தீங்கன்னா அது தெரியும். அப்படி சுருண்டு வந்து எழுதுனத மறைக்காம ஓலை இருக்கணும்னுதான் அப்படி செஞ்சாங்க..
அது இப்ப நோட்டு புக்குனு தொடர்ந்து அன்னைக்கு ஒரு நாள் என் நண்பரோட system ல desktop மேல ஒரு பிள்ளையார் சுழி ஓடிக்கிட்டு இருந்தத பாத்தேன் ... செய்யும் தொழிலே தெய்வம்...

தொடரும்....
Labels:
arthamulla inthu matham,
hindu,
hindu-myview,
hindu-region,
inthu,
inthumatham
Sunday, July 27, 2008
எதற்காக இது?
சத்தியமாய் இந்து மதம் வெறும் மூட நம்பிக்கைகளின் கூடாரமல்ல....இது அதற்கும் மேற்பட்டது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை....இங்கே நான் கொடுக்கப் போகும் உண்மைகள் சிலரால் பலரால் ஏற்றுக்கொள்ளப் பட முடியாததை இருக்கலாம்ஆனால் ஒரு காலமும் மறுத்துப் பேச முடியாததாய் இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை,,,,,,,,இது அர்த்தமுள்ள இந்து மதம் படித்தவர்களுக்கு அதன் தொடர்ச்சியாய் தெரிய வேண்டும் எனும் குறிக்கோளை முதன்மையாய் கொண்டு தொடங்குகிறேன்......பிள்ளையார் சுழி போடு தொடங்கிடுவோமா?
Subscribe to:
Posts (Atom)